காமன்வெல்த் 2022: ஹிமா தாஸ் தங்கம் வென்றாரா? பரவும் பொய் செய்திகள்!

விளையாட்டு

காமன்வெல்த் தொடரில் தடகள போட்டிகள் இன்னும் துவங்காத நிலையில் ஹிமா தாஸ் தங்கம் வென்றுள்ளதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

திங் எக்ஸ்ப்ரஸ் என்று அழைக்கப்படும் அஸ்ஸாமைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ் காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர், மற்றும் 4×400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

காமன்வெல்த் தடகள போட்டிகள் வரும் ஆகஸ்ட் 2’ஆம் தேதி மதியம் 2:30 க்கு தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பிரிவில் தங்கம் வென்றுள்ளதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த போது, ஜூலை 2018ல் ஃபின்லாந்தில் நடைபெற்ற வேர்ல்ட் அண்டர்20 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வீடியோ என தெரியவந்துள்ளது.

இந்த தொடரில் ஹிமாதாஸ் 51.46 நொடிகளில் ஓடி முடித்து சர்வதேச ஓட்டப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை என்ற சாதனையை படைத்திருந்தார்.

  • க.சீனிவாசன்
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *