ISSF World Cup: துப்பாக்கிச் சூட்டில் இந்திய ஜோடிக்கு தங்கம்!

Published On:

| By christopher

பாகுவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா ஜோடி தங்கப் பதக்கம் வென்றனர்.

அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் ISSF உலகக் கோப்பை போட்டி கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று (மே 12) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் செர்பிய ஜாம்பவான்களான டாமிர் மைக் மற்றும் ஜோரானா அருனோவிச் ஆகியோருக்கு எதிராக, இந்தியாவின் திவ்யா டிஎஸ் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி மோதியது.

இதில் ஆரம்பம் முதல் கடைசி வரை கடுமையாக இரு அணிகளும் மோதிய நிலையில் 16-14 என்ற கணக்கில் முதலிடம் பிடித்த இந்திய ஜோடி தங்கப்பதக்கத்தை வென்றது.

மார்ச் மாதம் போபாலில் தனிநபர் ஏர் பிஸ்டல் வென்ற சரப்ஜோத்துக்கு இது இரண்டாவது ISSF உலகக் கோப்பை தங்கமாகும். அதே சமயம் திவ்யாவுக்கு உலகக்கோப்பையில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இந்த போட்டியில் செர்பியாவின் டாமிர் மற்றும் ஜோரானா ஜோடி வெள்ளி வென்ற நிலையில், துருக்கியின் இஸ்மாயில் கெலஸ் மற்றும் சிமால் இல்மாஸ் ஜோடி வெண்கலம் வென்றனர்.

இரண்டாவது இடத்தில் இந்தியா

ஒட்டுமொத்தமாக ISSF உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதே வேளையில் சீனா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் அடுத்த 3 நாட்களில் இன்னும் 6 தங்கப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் கல்லூரிகள்!

ப்ளஸ் டூ மதிப்பெண் பட்டியல் இன்று முதல்  பள்ளிகளில் விநியோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel