டி20 கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள், டி 20 என மூன்று தொடர்களிலும் விளையாடி வருகிறது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தநிலையில் ஆடும் பிளேயிங் லெவனில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும். இஷான் கிஷனுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் ஆடினால் அதிரடியான ஆட்டத்தை மேற்கொள்வார்.
இஷான் கிஷனின் டி20 ஃபார்ம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த 15 இன்னிங்ஸில் அவர் 40 ரன்கள் கூட எடுக்கவில்லை. அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக உள்ளது. அவர் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளார். டி20 என்பது ஒரு நாள் போட்டியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவர் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜெயிலர் ரிலீஸ்: ஊழியர்களுக்கு ட்ரீட் கொடுத்த நிறுவனம்!
அண்ணாமலை நடைபயணத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவா? – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!