இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று (அக்டோபர் 9 ) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய அவர்கள் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணியானது 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 282 ரன்களை குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 110 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்து அசத்தினார்.
நான்கு பவுண்டரி, ஏழு சிக்ஸர்
இப்படி இவர் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து இருந்தாலும் போட்டியின் சரியான நேரத்தில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் 84 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள், என 93 ரன்கள் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்தை சற்று தடுமாற்றத்துடன் எதிர்கொண்ட இஷான் கிஷன் 40 பந்துகளை சந்தித்த பின்னர் தனது நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டு மிகவும் அதிரடியாக விளையாடினார்.
நானும் தோனியோட ஊருதான்
குறிப்பாக உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படும் ரபாடா மற்றும் நோர்க்கியா ஆகியோரின் அதிவேகப்பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்ட அவர்,
சிக்ஸர்களை பறக்க விட்டு தானும் தோனியின் ஊரிலிருந்து தான் (ராஞ்சி) வருகிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்க சொல்லி இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமாகிய அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்கண்ட் மாநில அணிக்காக விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 யில் வாய்ப்பு
இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த இசான் கிஷன் மோசமான ஃபார்ம் காரணமாக அண்மையில் இந்திய அணியில் தனது இடத்தை தவறவிட்டார்.

அதனை தொடர்ந்து நிரந்தர இடமின்றி தவித்து வரும் வேளையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தனது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பி வருவதால்,
விரைவில் அவர் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் பிட் அடித்த மாணவர்கள்: போலீசார் தீவிர விசாரணை!