இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்த தினமாக, இன்றைய நாள் மாறியுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில், இன்று (நவம்பர் 15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. Rain at India newzealnd semifinal?
ஒருபுறத்தில், விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிபட்டியலில் முதலிடம் பெற்ற இந்திய அணி, அதே ஆதிக்கத்துடன் அரையிறுதியில் களமிறங்கவுள்ளது.
மறுபுறத்தில், 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4வது இடத்தில் இருந்தாலும், பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 பிரிவுகளிலும் மிரட்டலான வீரர்களை கொண்டு களம் காணவுள்ளது நியூசிலாந்து. எனவே, இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று தான் கூற வேண்டும்.
பதிலடி கொடுக்குமா இந்தியா?
முன்னதாக, இந்த உலகக்கோப்பை தொடரில் இந்த 2 அணிகள் மோதிக்கொண்ட தர்மசாலா போட்டி, கடைசி வரை த்ரில்லாக சென்ற நிலையில், அப்போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. பந்துவீச்சில் ஷமி 5 விக்கெட்களை வீழ்த்த, பேட்டிங்கில் கோலி 95 ரன்கள் விளாசி இருந்தார்.
வான்கடே மைதானத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை ஒரு முறை மட்டுமே மோதியுள்ள நிலையில், அந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார்.
அதனால், இன்றைய போட்டிலும் அதே போல் அந்த வரலாற்று சிறப்புமிக்க 50வது ஒருநாள் சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அனைத்திற்கும் மேலாக, 2019 ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதியில், 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் இதயங்களை சுக்குநூறாய் நொறுக்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்தியா இன்று பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.
இன்றைய போட்டியில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
AccuWeather வழங்கியுள்ள வானிலை அறிக்கையின்படி, மும்பையில் இன்று தெளிவான வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று அங்கு மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. Rain at India newzealnd semifinal?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
அதிமுக பெயர், சின்னம், பதவி எதுவுமில்ல… பன்னீர் லெட்டர் பேடில் மாற்றம்!
தளபதி 68 : நெகட்டிவ் ரோலில் விஜய்?
இன்ஸ்டா கணக்கை அழிக்காமல் ‘திரெட்ஸ்’ கணக்கை அழிக்கும் வசதி அறிமுகம்!