1000வது போட்டி: மும்பையிடம் மேட்ச் பிக்சிங்கில் தோற்றதா ராஜஸ்தான்?

Published On:

| By christopher

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது ரசிகர்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சி.எஸ்.கே – பி.பி.கே.எஸ் போட்டியைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் 1000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

வான்கடேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும், தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 124 ரன்களும் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதம் கண்டார். இதில் 16 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.

மும்பை வீரர்கள் அதிரடி!

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில், தனது 36வது பிறந்தநாள் கொண்டாடிய கேப்டன் ரோகித் சர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன்(44), சூர்யகுமார் யாதவ்(55) ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தனர்.

is mumbai indians involved in match fixing

அவர்களைத் தொடர்ந்து டிம் டேவிட்(45) மற்றும் திலக் வர்மா(29) கடைசி வரை ஆட்டமிழக்கமால் விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியைத் தோற்கடித்தனர்.

ரசிகர்கள் சந்தேகம்!

எனினும் மும்பை அணியின் இந்த அபார வெற்றி ரசிகர்களிடையே பெரும் கேள்விகளையும், சந்தேகத்தையும் எழுப்பியது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனுபவம் வாய்ந்த வீரரான ஜேசன் ஹோல்டர் முதல் மூன்று பந்துகளையும் புல்டாஸாக வீசினார். இதனை பயன்படுத்தி கொண்ட டிம் டேவிட் 3 சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனையடுத்து ஹோல்டர் எப்படி ஹாட்ரிக் ஃபுல் டாஸ்களை வீசினார் என்றும், 1000வது போட்டியில் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறுவதற்காக மேட்ச் பிக்சிங் நடைபெற்றுள்ளதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/itsjeeevan/status/1652744403973447682?s=20

இந்த போட்டியின் நடுவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, ஆட்ட நடுவர்களுடன் பேசிய புகைப்படம் வைரலானதும் ரசிகர்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!

எலான் மஸ்க் சரியான தலைவர் இல்லை: ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment