22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. உலகமெங்கும் இருந்து எதிர்நோக்கி காத்திருந்த அரையிறுதி போட்டி தான் குரோசியா மற்றும் அர்ஜென்டினாவிற்கு இடைப்பட்ட அரையிறுதிப் போட்டி.
ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றுவிட்டது என்றாலும், இன்னொரு புறம் மெஸ்ஸி இதன் பின்பு உலக கோப்பையில் ஆட மாட்டார் என்பது தான் வைரலான பேச்சாக மாறியிருக்கிறது.
நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 18 வரை பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் , தற்போது அரையிறுதி என்னும் அட்டகாசமான இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது கால்பந்து 2022 போட்டிகள்.
அந்த வகையில் 32 அணிகளிலிருந்து அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு 16 அணிகள் மற்றும் அதிலிருந்து 8 அணிகளாக களமிறங்கிய காலிறுதிப்போட்டிகள் , அதிலிருந்து நான்கே அணிகளாக அரையிறுதிக்கு அர்ஜென்டினா, குரோசியா , ஃப்ரான்ஸ் மற்றும் மொரோக்கா முன்னேறின.
அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியானது வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியுள்ளது.அது மட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ரன்னர் அப்பாக வந்த குரோசியா அணி அரையிறுதியில் இருந்து வெளியேறியிருக்கிறது.
முதல் அரையிறுதி போட்டியானது டிசம்பர் 14 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு அர்ஜென்டினாவிற்கும் , குரோசியாவிற்கும் இடையே லூசைல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியானது ஆரம்பத்திலிருந்தே அதிரடி சரவெடியாய் விளையாடியது. இதில் இறுதிப்போட்டிக்கு சென்ற அர்ஜென்டினா கிட்டத் தட்ட 9 ஷாட்ஸ், 7 டார்கெட் வரை செய்து ஆடிய ஆட்டத்தில் 399 பாஸ்களை செய்து அதிரடியாய் ஆடியது.
15 பவுல்களை பெற்றிருந்தாலும் , விடாது ஆடியதால் ஆட்டத்தின் 68 -வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீர்ர ஜீலியன் ஆல்வரெஸ் மேலும் ஒரு கோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த ஆட்டத்தின் நடுவே அவ்வப்போது குரோசியா தலைகீழாக ஆடி கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை,இறுதியில் 3-0 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா முன்னிலைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
இந்த இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா முன்னேறியதற்கு மெஸ்ஸி தான் காரணம், அதிலும் அவர் அடித்த ஒரு கோலும் , மற்ற இரண்டு கோல்களும் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்பட்டது.
இதில் மெஸ்ஸி அடித்த 5-வது கோல் முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்த 5-வது கோல் முக்கியமாக பார்க்கப்பட்டதற்கு காரணமே கோல்டன் பூட் தகுதிக்கான தேர்வில் இந்த போட்டிக்கு முன்பு வரை 4-கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்த மெஸ்ஸி 5-வது கோலின் மூலமாக முதல் இடத்தில் இருந்த ஃபிரான்ஸ் அணியின் எம்பாப்பே உடன் பகிர்கிறார். இன்று நடைபெறும் ஃபிரான்ஸ் அணிப்போட்டியின் முடிவில் யார் இந்த விருதைப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, அர்ஜென்டினாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாய் இருந்த மெஸ்ஸி இந்த ஆட்டத்தோடு தனது உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறுவார் என்றும் எல்லோரும் பேசி வருவது தற்போது உறுதியாக்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து மட்டும் வெளியேறுகிறார்.
அப்போது அர்ஜென்டினாவின் கால்பந்து எதிர்காலம் எப்படி இருக்கும் உலக கோப்பையில் என்று ஒருபுறம் மக்கள் கவலையோடு இருந்தாலும் , இந்த முறை கடைசி போட்டியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆட்டம் வெறித்தனமான அசுரத்தனமான ஆட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் ஃப்ரான்ஸ் மொரோக்காவிற்கு இடையேயான ஆட்டத்தில் இரண்டாவது இறுதிப்போட்டிக்கு செல்ல இருப்பது யார்?அர்ஜென்டினாவின் அசத்தல் வீரர் மெஸ்ஸி என்ன செய்ய இருக்கிறார் இறுதி ஆட்டத்தில்?என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பவித்ரா பாலசுப்ரமணியன்
அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால் எனக்கு வருத்தம் : ரொனால்டோ