FIFA WorldCup : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா

விளையாட்டு

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பையில் தற்போது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மீது தான் அனைவரது கண்களும் உள்ளன.

இதுவரை நடந்துள்ள முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில் நெதர்லாந்து, செனேகல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகள் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பையாக கத்தார் பார்க்கப்படும் நிலையில் இதில் அர்ஜென்டினா அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என அந்நாட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அர்ஜென்டினா அணி நள்ளிரவு 12.30 மணியளவில் தோஹாவில் உள்ள மைதானம் 974ல் போலந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

நடப்பு உலகக்கோப்பையில் குரூப் சியில் ஒரு டிரா மற்றும் ஒரு வெற்றியுடன் போலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் அர்ஜென்டினா 2வது இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் முறையே சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

இருப்பினும் இந்த குரூப்பில் இடம்பெற்றள்ள 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை பெற்றுள்ளன.

is messi argentina chances to move on next round

போலந்து: அர்ஜென்டினா அணிக்கு எதிரான வெற்றி, ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி தலைமையிலான அணியின் அடுத்து சுற்று வாய்ப்பை உறுதிபடுத்தும்.

போலந்து தோற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ அணி, சவுதி அரேபியாவை வீழ்த்த வேண்டும்.

சவூதி அரேபியா மற்றும் மெக்சிகோ இடையே சமனில் முடிந்தால் கோல் வித்தியாசம் கணக்கில் கொள்ளப்படும். இது போலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

அர்ஜென்டினா: போலாந்து அணியை வீழ்த்துவதன் மூலம் அர்ஜென்டினாவின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகிவிடும். அதே வேளையில் தோல்வியை தழுவினால் உலகக் கோப்பையில் வெளியேறும் சூழ்நிலை ஏற்படும்.

டிரா செய்தால் கூட அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு கொஞ்சம் கடினம் தான். ஏனெனில் ஒருவேளை மெக்சிகோ சவுதி அரேபியாவை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினாலோ அல்லது டிரா செய்தாலோ அது முற்றிலும் பாதகமாகிவிடும்.

எனவே வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு வாய்ப்புள்ள நிலையில் போலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி கடுமையாக போராடும் என்பதை நிச்சயம் நம்பலாம்.

சவுதி அரேபியா: அடுத்த சுற்றுக்கு தகுதி பெற நாளை நடைபெறும் போட்டியில் பெரிய கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தவேண்டும்.

அதேவேளையில் டிரா செய்தால் அர்ஜென்டினாவை போலாந்து அணி தோற்கடிக்க வேண்டும் அல்லது பெரிய கோல் வித்தியாசத்தில் போலாந்து தோற்க வேண்டும்.

மெக்சிகோ: ஒரே ஒரு புள்ளியுடன் இருக்கும் மெக்சிகோவிற்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் போலந்து மற்றும் அர்ஜென்டினா இடையேயான போட்டி டிராவில் முடிந்து, சவுதி அரேபியா அணியை மெக்சிகோ வென்றால் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு நடக்கும் பட்சத்தில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ இடையேயான கோல் வித்தியாசம் கணக்கிடப்படும். அதன்மூலம் மெக்சிகோ அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை பெற நேரிடும்.

கிறிஸ்டோபர் ஜெமா

தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை:யார் இந்த நாடவ் லேபிட்

வேலுமணி வழக்குகள்: ஒரு பிளஸ், ஒரு மைனஸ் – தீர்ப்பு விவரம்!

+1
1
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *