தொடரும் மன்கட் சர்ச்சை…. மீண்டாரா தீப்தி சர்மா? எம்சிசி சொல்வது என்ன?

விளையாட்டு

கடந்த 3 நாள்களாக சமூகவலைதளங்களில் அதிகமாக பேசப்படுவராக மாறியுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா. அவர் செய்த ஒரு ரன் அவுட். அதுவும் ஐசிசி விதிமுறைகளின்படி அவர் செய்த மன்கட்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி.

வரலாற்று வெற்றி, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடி சதம், மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் ஓய்வு என இந்த தொடரின் மூலமாக இந்திய மகளிர் அணியை கொண்டாட பல விஷயங்கள் இருந்தும் சமூகவலை தளங்களில் பேசப்படுவது என்னவோ தீப்தி சர்மாவின் மன்கட் விக்கெட் தான்.

மன்கட் விக்கெட் என்றால் என்ன?

ஐசிசி சமீபத்தில் இந்த மன்கட் விதிமுறையை அமல்படுத்தியது. அந்த சட்டத்திட்டத்தின்படி, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசப்படுவதற்கு முன் கிரீஸைவிட்டு வெளியே சென்றால் பந்து வீச்சாளரால் அவுட் செய்யலாம். இது தான் மன்கட்.

இதனை ஐசிசி விதியாக வரையறுத்து இருந்தாலும், இதற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் ஆதரவு, எதிர்ப்பு என இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

is mcc supports deepti sharma on mankading?

மன்கட் எப்படி தோன்றியது?

மன்கட் விக்கெட் விதிக்கு விதை போட்டது ஒரு இந்திய பந்துவீச்சாளர் தான். 1947ல் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா ஆட்டத்தில், வினு மன்கட் என்ற இந்திய பந்துவீச்சாளர் இதே போன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் பிரவுனை அவுட் செய்தார். அதுமுதல் இது ‘மன்கட் முறை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தீப்தி சர்மா செய்தது என்ன?

கடந்த சனிக்கிழமை புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் 43 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்திருந்தது. கைவசம் ஒரு விக்கெட் இருக்க, மீதமுள்ள 42 பந்துளில் 23 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எளிய இலக்குடன் இருந்தது இங்கிலாந்து அணி.

is mcc supports deepti sharma on mankading?

இந்நிலையில்தான் 44வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் 47 ரன்களுடன் விளையாடி வந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ‘மன்கட்’ முறையில் நான்-ஸ்ட்ரைக்கில் எண்டில் அவுட் செய்திருந்தார் தீப்தி. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இங்கிலாந்து அணியையும் ஒயிட் வாஷ் செய்தது.

மன்கட் : ஆதரவும், எதிர்ப்பும்

இந்தியாவின் வெற்றியை விட தீப்தி சர்மாவின் மன்கட் விக்கெட் இணையத்தில் சர்ச்சையாக உருமாறியது. இதுகுறித்து கிரிக்கெட் வல்லுநர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.

குறிப்பாக ’கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு மன்கட் விக்கெட் எதிரானது’ என்று இங்கிலாந்து வீரர்கள், வீராங்கனைகள், கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

is mcc supports deepti sharma on mankading?

அதே சமயத்தில் அவர் ஐசிசி விதிகளின் படி தான் செயல்பாட்டார் என்று இந்திய வீரர் அஸ்வின், முன்னாள் வீரர் சேவாக் போன்று பலரும் தீப்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து ஐசிசி விதிகளை மீறிய போட்டிகளையெல்லாம் இந்திய ரசிகர்கள் ஆதாரத்துடன் இணையத்தில் பகிர தொடங்கினர்.

எச்சரிக்கையை மீறினார்!

இந்நிலையில் கோப்பையுடன் இந்திய வீராங்கனைகள் நேற்று இந்தியா திரும்பினர். அப்போது மன்கட் விக்கெட் குறித்து தீப்தி சர்மாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தீப்தி சர்மா, “சார்லி டீன் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயன்றார். அது குறித்து அவரிடம் சிலதடவை எச்சரித்து இருந்தோம். ஆனால் அவர் அதனை திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு அவுட் செய்தோம்” என தெரிவித்திருந்தார்.

சார்லி மறுப்பு ; ரசிகர்கள் பதிலடி!

தீப்தியின் இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார் சார்லி. “எனக்கு அது குறித்து எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு பதிலடியாக, ”இந்த முறையில் அவுட் செய்ய எந்தவித எச்சரிக்கையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போது பேட்மேன் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்” என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்கட்டில் இருந்து தப்பித்த தோனியின் வீடியோவை பகிர்ந்து, “உங்கள் பேட்டை கிரீஸிற்குள் வைத்திருங்கள்” என தெரிவித்து இருந்தார்.

இங்கிலாந்து வீரர் ஒருவர் தீப்திக்கு ஆதரவு கொடுத்தது வைரலானது.

தீப்தி செய்தது சரியே!

எது எப்படியோ தீப்தி செய்த மன்கட் விக்கெட் சர்வதேச கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த ரன் அவுட் தொடர்பாக கிரிக்கெட் விதிகளை வகுக்கும் அமைப்பான மேர்லிபோன் கிரிக்கெட் கிளப் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் ”விதி எண் 38ன் படி தீப்தி சர்மா செய்த ரன்-அவுட் சரியானதுதான்” என எம்.சி.சி கூறி உள்ளது.

இதன்மூலம் தீப்தி செய்த மன்கட் விக்கெட் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

is mcc supports deepti sharma on mankading?

அதேநேரத்தில் ”பந்துவீசுவதற்கு முன்பாக எந்த பேட்ஸ்மேன் கிரீசை விட்டு சென்றாலும், மன்கட் தொடரும்” என்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.

இதனால் வரும் காலங்களில் மன்கட் விக்கெட் கிரிக்கெட் களத்தில் அதிகளவில் நடக்கும் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

20 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒயிட் வாஷ்’: இந்திய மகளிர் அணி செய்த தரமான சம்பவம்!

பருவ மழைக்கு முன்… அமைச்சர்கள், அதிகாரிகளை எச்சரித்த முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.