ஆஸ்திரேலிய அணி வீரர்களை ஏலத்தில் வாங்க அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஹேசில்வுட் ஏலத்திற்கு வந்தபோது பெங்களுரூ அணி கொடுத்த ரியாக்சன் வைரலாக பரவி வருகிறது.
துபாயில் இன்று (டிசம்பர் 19) நடந்து வரும் மினி ஏலத்தில் அடிப்படை விலையாக ரூ.2 கோடியுடன் உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி வீரர் ஹேசில்வுட்டும் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் அவரை வாங்க எந்த அணியும் கடைசி வரை முன்வரவில்லை.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டி நடைபெறும் காலத்தில் முதல் ஐந்து வாரம் பங்கேற்க முடியாத நிலையில் அவரை யாரும் வாங்க முயற்சிக்கவில்லை என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே ஜேசில் ஹேசில்வுட் ஏலத்தில் இடம்பெற்ற போது அவரை விடுவித்திருந்த பெங்களுரூ அணி நிர்வாகத்தினர் காட்டிய ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
RCB reaction when asked about Josh Hazlewood. pic.twitter.com/Iomybm6I4N
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023
ஹேசில்வுட்டை ஆர்.சி.பி. விடுவித்தது ஏன்?
கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக முதன்முறையாக களமிறங்கினார் ஹேசில்வுட். அடுத்த ஆண்டில் அணிக்கு முக்கிய பங்காற்றிய அவர் 4வது முறையாக கோப்பை வெல்லவும் உதவியாக இருந்தார்.
2022ஆம் ஆண்டில் ரூ.7.7 கோடிக்கு ஹேசில்வுட்டை விலைக்கு வாங்கியது பெங்களூரூ அணி. ஆனால் அங்கு சோபிக்க தவறினார். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். அதனால் இந்த ஆண்டு அவரை அணியில் இருந்து விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IPL Auction: சொந்த அணி கேப்டனின் ’பெரும்’ சாதனையை சில நிமிடங்களில் வீழ்த்திய பவுலர்!
வெள்ள பாதிப்பு: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!