2024 ஐபிஎல் தொடரில், தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமலே தொடரில் இருந்து வெளியேறியது.
அந்த தொடரில், இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிஎஸ்கே அணி கோப்பையை வென்று தோனிக்கு ஒரு சிறப்பான சென்ட்-ஆஃப் வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்த நிலையில், ‘தல’ தோனி ஓய்வு பெறாமல் இன்னொரு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையில், தோனி குறித்தும் அவரது ஓய்வு குறித்தும் பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியது. அந்த சந்திப்பில், 5 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருக்கும் வீரர்களை ‘அன்-கேப்டு’ வீரர்களாக கருதும் பழைய விதியை மீண்டும் அமல்படுத்த வென்றும் என சிஎஸ்கே அணி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.
மேலும், இந்த கோரிக்கை தோனியை கருத்தில் கொண்டே முன்வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அந்த விதியை பிசிசிஐ அமல்படுத்தும் பட்சத்தில் தோனி இன்னொரு சீசனில் விளையாடலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், அந்த விதியை அமலாகிறாதா? இல்லையா? என்பதை பொருட்படுத்தாமல், தோனி 2025 ஐபிஎல் தொடருக்கு முன் தனது ஓய்வை அறிவிக்கலாம் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை என்றாலும், ஒருவேளை தோனி ஓய்வு பெரும் பட்சத்தில், சிஎஸ்கே தனது 17 ஆண்டு ஆஸ்தான விக்கெட்-கீப்பரை இழக்கும். இதன்மூலம், சென்னை அணி ஒரு புதிய விக்கெட் கீப்பரை தேட வேண்டிய நிலை ஏற்படும்.
அப்படியான நிலையில், மெகா ஆக்சனுக்கு முன்பாக ரிஷப் பண்ட் ஒருவேளை டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டால், அவருக்கு சென்னை அணி குறிவைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
ஐபோன் 16 அறிமுகத்தால் ரூ.20,000 வரை விலை சரிந்த மற்ற ஐபோன்கள்!
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷ்யா செல்லும் இந்திய ஆலோசகர்!