2024 ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வா?

விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரிக்க முடியாதது, சென்னை சூப்பர் கிங்ஸும், கேப்டன் தோனியும் தான். தோனி இல்லாத சிஎஸ்கே அணியை ரசிகர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்தளவிற்கு ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் தோனி மீது அன்பு மழையை ரசிகர்கள் பொழிந்து வருகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி துவங்கும் முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சிஎஸ்கே அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற தோனி, இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தோனியின் பள்ளி பருவ நண்பர் பரம்ஜித், ஒன் கிரிக்கெட் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இது இருக்காது என்று நான் நினைக்கிறேன். அடுத்த சீசனிலும் நிச்சயமாக அவர் விளையாடுவார். அதற்கு காரணம் அவர் நல்ல உடல்தகுதியோடு இருப்பது தான்.

தோனி இன்னமும் எங்களுடன் நட்போடு இருக்கிறார். எங்கள் நட்பு குறித்து நான் பெருமையாக கருதுகிறேன். அவர் கையெழுத்து போட்ட கிரிக்கெட் பேட்டை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற போகிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த சீசனிலும் அவர் விளையாடுவார் என்று தோனியின் நண்பர் கூறியிருப்பது தோனி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக தலைவர்கள் படத்தை பயன்படுத்த பாஜக வெட்கப்பட வேண்டும்: ஜெயக்குமார்

மோடி விசிட்: சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *