இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன், அதிரடியான பினிஷர் என்ற பல சாதனைகளால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஒருபுறம் இவரை ரசிகர்கள் கொண்டாடினாலும் மறுபக்கம் அவர் மீதான விமர்சனமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில், அடுத்த தலைமுறைக்கான தரமான வீரர்களை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சீனியர் வீரர்களை கழற்றிவிட துவங்கினார்.

அதுபோல், ஆல்ரவுண்டராக சிறப்பாக விளையாடி வந்த இர்பான் பதானும் 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு, சிறப்பாக விளையாட தவறியதால் கொஞ்சம் கொஞ்சமாக தோனியால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அதன்பின் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படாத காரணத்தால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார்.
சமீபகாலங்களாக லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் விளையாடி வரும் இர்பான் பதான் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதை பார்த்த அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் லெஜெண்ட்ஸ் தொடரில் இர்பான் பதான் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் 2012இல் இந்தியாவுக்காக தன்னுடைய 29 வயதில் கடைசியாக விளையாடியிருந்த அவரை கழற்றிவிட்டு ஸ்டுவர்ட் பின்னி போன்றவருக்கு வாய்ப்பு வழங்கிய தோனி மற்றும் அணி நிர்வாகத்தை சபித்து வருவதாக தனது ஆதங்கத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்களிடம் வைரலான அந்த ட்வீட்டை பார்த்த இர்பான் பதான், “யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம். உங்களது அன்புக்கு நன்றி” என பதிலளித்துள்ளார். அவருடைய ட்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியா-தென்னாப்பிரிக்கா: டி20 தொடர் முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்?
அடுத்தடுத்த இழப்பு : சோகத்தில் மகேஷ் பாபு