உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 13 ஆண்டுகால ஏக்கத்தை தணித்து முதன் முறையாக சூப்பர் 12 சுற்றுக்கு அயர்லாந்து அணி முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியும், தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணியும் இன்று (அக்டோபர் 21) மோதின.
ஹோபர்ட் நகரத்தில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தடுமாறிய கரீபியன் வீரர்கள்!
அதிரடியான ஆட்டக்காரர்கள் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இந்த தொடரில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. அது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.
20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி 146 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கடைசி வரை ஆட்டமிழக்கமால் ஆடிய பிராண்டன் கிங் 62 ரன்கள் அடித்தார்.
ஆரம்பம் முதலே அதிரடி!
அதனைதொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
தொடக்க வீரர்ராக கேப்டன் பால்பிர்னியுடன், மூத்தவீரர் பால் ஸ்டிர்லிங் கைகோர்த்த நிலையில் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
8 வது ஓவரில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அட்டகாசமாக ஆடி வந்த கேப்டன் பால்பிர்னி 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் அவரை தொடர்ந்து களமிறங்கிய டக்கரும், டாப் டக்கராக (45 ரன்கள்) மட்டையை சுழற்றினார்.
அதனால் இரண்டு ஓவர்களை மீதம் வைத்து 18வது ஓவரிலேயே 150 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள் , 2 சிக்சர்களுடன் பால் ஸ்டிர்லிங் 66 ரன்கள் குவித்தார்.
13 வருடத்திற்கு பிறகு..
இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணியின் 13 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
2009ம் ஆண்டுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு முதல் சுற்றை கடக்க முடியாமல் அயர்லாந்து அணி தவித்து வந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த அபார வெற்றியின் மூலம் தற்போது முதல் முறையாக சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது அயர்லாந்து.
2009ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அணியில் விளையாடிய பால் ஸ்டிர்லிங் தற்போதைய அணியிலும் அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோகத்துடன் திரும்பும் மே.கி தீவுகள் அணி!
அதேவேளையில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2007ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவதுமுறையாக டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
ஆஸ்திரேலியா உலகக்கோப்பை தொடரில் முன்னணி நட்சத்திர வீரர்கள் யாரும் இன்றி களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி.
கரீபியன் அணியின் வழக்கமான ஆக்ரோச ஆட்டம் மிஸ்ஸான நிலையில், தற்போது உலகக்கோப்பை கனவையும் இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்!
காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!