இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நடத்திய நிலையில், சம்பத் குமார் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கினை இன்று (டிசம்பர் 15) விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும் அவர் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
14 எம்பிக்கள் சஸ்பெண்ட் : எதிர்க்கட்சிகளுக்கு ஜெகதீப் தன்கர் அழைப்பு!
‘லியோ’ல அது தப்பாகிருச்சு… இனிமே அதை செய்ய மாட்டேன்: லோகேஷ் கனகராஜ்