துபாயில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஏலத்தை முதன்முறையாக, பெண் ஒருவர் நடத்துகிறார் என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.
ஐபிஎல் வரலாற்றை பொறுத்தவரை ரிச்சர்ட் மேட்லி, ஹியூக் எட்மடஸ் என இதுவரை ஆண்களே ஏலத்தை நடத்தி வந்தனர். 48 வயதான மல்லிகா சாகர் அந்த வரலாற்றை தற்போது மாற்றி எழுதி இருக்கிறார்.
இதற்கு முன் பெண்களுக்கான WPL ஏலம் மற்றும் ப்ரோ கபடி ஏலம் ஆகியவற்றை நடத்திய அனுபவம் மல்லிகா சாகருக்கு உள்ளது.
இந்த அடிப்படையில் தான் ஐபிஎல் ஏலத்தை நடத்தும் வாய்ப்பு தற்போது அவருக்கு கைகூடியுள்ளது. ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை ஏலம் நடத்துபவரின் திறமை இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஏனெனில் சில நேரங்களில் தங்களுடைய திறமையால் வீரர்களின் விலையை ஏற்றி விடும் சாமர்த்தியமும் ஏலம் நடத்துபவருக்கு உண்டு. இதற்காக மல்லிகா சுமார் 2 கோடியே 25 லட்ச ரூபாயை சம்பளமாக பெறவுள்ளார்.
துபாயின் கோகோ கோலா அரங்கத்தில் இன்று (டிசம்பர் 19) நடைபெறவுள்ள இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 2.3௦ மணிக்கு தொடங்குகிறது.
https://twitter.com/IPL/status/1736796122834772238
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் இந்த ஏலத்தில் பங்கு பெறுகின்றன.
வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து மொத்த அணிகளுக்கும் 77 வீரர்களே தேவைப்படும் நிலையில், 333 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
IPL2024: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் இளம் மற்றும் மூத்த வயது வீரர்… எந்த நாடுன்னு பாருங்க!