ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் மோதப்போகும் அணிகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடரில் ஐபிஎல்லுக்கு என தனியிடம் உண்டு. உலகில் உள்ள தலைசிறந்த வீரர்கள் தொடங்கி உள்ளூர் இளம் வீரர்கள் வரை விளையாடுவதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் 17-வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆடப்போகும் இரண்டு அணிகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
Here we go🟡🔴
Season Opener game of IPL 2024 is set to be played between CSK & RCB at Chepauk on 22nd of March. pic.twitter.com/xyss6KaozC
— 𝐒𝐞𝐫𝐠𝐢𝐨 (@SergioCSKK) November 29, 2023
அந்த வகையில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி, டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. ஈ சாலா கப் நமதே என பெங்களூரும், நடப்பு சாம்பியன் என கெத்தாக சென்னையும் ஆடும் என்பதால் முதல் ஆட்டத்தில் அனல் பறந்தாலும் ஆச்சரியமில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா