17-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கு பெறும் இந்த தொடருக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என்பதால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கோப்பையுடன் அவர் விடைபெறுவாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் கேப்டனுக்கும் வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் குறைந்த தொகையினை ஹைதராபாத் அணியின் கேப்டனும், அதிக தொகையினை லக்னோ அணியின் கேப்டனும் சம்பளமாக பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் கேப்டன்கள் வாங்கும் சம்பளத்தினை கீழே காணலாம்:
- எம்.எஸ்.தோனி – ரூபாய் 12 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
- ரோஹித் சர்மா – ரூபாய் 16 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
- சஞ்சு சாம்சன் – ரூபாய் 14 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
- ஸ்ரேயாஸ் ஐயர் – ரூபாய் 12.25 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
- பாப் டூ பிளசிஸ் – ரூபாய் 7 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
- எய்டன் மார்க்ரம் – ரூபாய் 2.60 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
- டேவிட் வார்னர் – ரூபாய் 6.25 கோடி (டெல்லி கேபிடல்ஸ்)
- கே.எல்.ராகுல் – ரூபாய் 17 கோடி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
- ஷிகர் தவான் – ரூபாய் 8.25 கோடி ( பஞ்சாப் கிங்ஸ்)
- ஷூப்மன் கில் – ரூபாய் 15 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
“உத்தரவை மீறவில்லை”: எடப்பாடி வழக்கில் பன்னீர் விளக்கம்!
விடுதலை படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு?… உடைத்து பேசிய வெற்றிமாறன்!