1427 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

விளையாட்டு

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று (பிப்ரவரி 17) வெளியிட்டுள்ளது.

அதன்படி மார்ச் 31ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இரண்டாவது நாளான ஏப்ரல் 1ம் தேதி இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஏப்ரல் 2ம் தேதி ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

ஏப்ரல் 3ம் தேதி லக்னோ அணிக்கு எதிராக விளையாடும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1427 நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண உள்ளது.

IPL schedule 2023

ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியாக மே 6ஆம் தேதி சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

மே 28ம் தேதிவரை நடைபெறும் ஐபிஎல் 2023ம் சீசனில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் அகமதாபாத், மொஹாலி, லக்னோ,

ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக விளையாடவுள்ள 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி குரூப் ஏ-யில் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இருக்கும்.

குரூப் பி-யில் சென்னை, பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி நிறைவடையும் நிலையில், தங்களது குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மே 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் களம் காண பிளே ஆப் போட்டிகளில் விளையாடும்.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அதானி நிறுவன பங்கு மோசடி: விசாரணைக்கு குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *