ஐபிஎல் தொடரின் 66 வது லீக் போட்டி தர்மசாலாவில் நேற்று(மே19) நடைபெற்றது. ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் 15 ஆண்டு காலமாக நீடித்து வந்த ஒரு சாதனையை முறியடித்துள்ளார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 187 ரன்களை குவிக்க பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 36 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் , நடப்பு ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார்.
அவரது சராசரி 48.08 ஆகவும் ஸ்ட்ரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது. ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ளார்.
இந்நிலையில் , யாஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனை என்னெவென்றால்…சர்வதேச அணியில் இடம் பெறாமல் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக (2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார்) 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஷேன் மார்ஷ் இதுவரை இருந்து வந்த நிலையில் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் 21 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதனிடையே இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கைத்தூக்கி ஒற்றுமையை காட்டிய தலைவர்கள்!
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு பிரேக்: 12 மாவட்டங்களில் கனமழை!