2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏராளமான இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் மெகா ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் 320 கேப்டு பிளேயர்கள், 1224 அன்கேப் பிளேயர்கள், அசோசியேட் நேஷன்ஸில் இருந்து 30 வீரர்கள் உட்பட 1574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்
கடந்த சீசனுக்கான ஐபிஎல் ஏலம் துபாயின் கோகோ-கோலா அரங்கில் நடைபெற்றது. இந்தியாவை தாண்டி முதன்முறையாக வெளிநாட்டில் நடத்தப்பட்டது அதுவே முதன்முறை.
இந்த நிலையில் ரியாத், துபாய், வியன்னா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த ஆலோசனை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவின் அல்-ஜொகர் அரேனாவை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் ஐபிஎல் ஏலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளிநாட்டில் நடக்கவுள்ளது.
சவுதியை பொறுத்தவரை சமீப ஆண்டுகளாக விளையாட்டு துறையில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த கால்பந்து அணிக்காக தான் நட்சத்திர வீரர் ரொனால்டோ விளையாடி வருகிறார்.
அதேபோல் கடந்த ஆண்டு இந்தியா வந்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், ஐபிஎல் தொடரில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருந்த நிலையில் தற்போது மெகா ஏலம் அங்கு நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணி!
அமெரிக்க அதிபர் தேர்தல் : மேஜிக் நம்பர் 270… டிரம்ப் 198ல் முன்னிலை!