IPL FINAL: டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன்?

Published On:

| By Monisha

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மார்ச் மாதம் இறுதியில் தொடங்கிய ஐபிஎல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெறவிருந்த ஐபிஎல் இறுதி போட்டி மழை குறுக்கிட்டதால் தடைப்பட்டது.

அந்த இறுதிப்போட்டி ரிசர்வ் டே முறைப்படி இன்று (மே 29) அகமதாபாத் மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் போடும் நேரம் வரை மழை குறுக்கிடாமல் இருந்தது. தொடர்ந்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

போட்டி தொடங்கி நடைபெற்றாலும், மழை வந்தால் போட்டி பாதிக்கப்படும் என்ற சூழலில் சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் முடிவிற்குப் பிறகு குறிப்பிட்ட இலக்கை சேஸ் செய்ய சென்னை அணி பேட்டிங்கிற்கு களமிறங்கும். அப்போது, மழை குறுக்கிட்டால் டிஎல்எஸ் விதிப்படி சேஸிங் செய்யும் அணிக்கு ஒவர்களும் ரன்களும் குறைக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

குறைவான ரன்களை சேஸ் செய்து விளையாடும் போது வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கலாம்.

அதுமட்டுமின்றி, சென்னை அணியில் ருதுராஜ் கெய்வாட், ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இலக்கை சேஸ் செய்து 2வது இன்னிங்ஸில் விளையாடினாலும் வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தால் தான் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.

இறுதியாக கோப்பையை தட்டிச் செல்லவிருப்பது குஜராத் அணியா? அல்லது சென்னை அணியா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மோனிஷா

தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

எம்.டி.சி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share