IPL 2024: மொத்த அட்டவணை வெளியானது… சென்னை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Published On:

| By Manjula

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பல்வேறு சர்ப்ரைஸ்களை பிசிசிஐ அளித்துள்ளது.

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 5 போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட அணிகள் முதல் போட்டியை வென்றுள்ளன.

6-வது ஐபிஎல் போட்டி இன்று (மார்ச் 25) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப்-பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.

சத்தமின்றி திருமணம் முடித்த ‘ஆடுகளம்’ நடிகை

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முன்னதாக 21 போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்தநிலையில்  மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை சற்றுமுன் வெளியாகி இருக்கிறது.

அதன்படி குவாலிபயர் 2 மற்றும் ஐபிஎல் இறுதிப்போட்டி இரண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

https://twitter.com/mufaddal_vohra/status/1772232557918404954

குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகின்றன.  இதன் மூலம் 12 வருடங்களுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கடைசிப்போட்டி சென்னையில் தான் இருக்கும் என சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி சொல்லி இருந்தார். சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோனியின் ஆசையை நிறைவேற்றுமா? என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாமலை, எல்.முருகன் சாலை மறியல்… வருத்தம் தெரிவித்த எஸ்.பி: நீலகிரியில் நடந்தது என்ன?

திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை: துரை வைகோ

யார் இந்த ராபர்ட் புரூஸ்? நெல்லை காங்கிரஸ் வேட்பாளரின் பின்னணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel