ஐபிஎல் பைனல்: இன்றும் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை?

விளையாட்டு

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று(மே28) நடைபெறவிருந்த ஐபிஎல் 16 வது சீசனின் இறுதிப்போட்டி மழையின் காரணமாக இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டி ரிசர்வ் டேவில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டு டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டால் ஓவர் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கும்.

அதன்படி இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கினால் இரு அணிகளும் தலா 19 ஓவர்கள் விளையாடும். 10.30 மணிக்கு தொடங்கினால் தலா 15 ஓவர்களும், 11 மணிக்கு தொடங்கினால் தலா 12 ஓவர்களும், 11.30 மணிக்கு தொடங்கினால் தலா 9 ஓவர்களும், நள்ளிரவு 12.05 மணிக்கு தொடங்கினால் தலா 5 ஒவர்களுடன் போட்டி நடைபெறும்.

ஒருவேளை முதல் இன்னிங்ஸ் முழுமையாக நிறைவுபெற்று, இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட்டால் டிஎல்எஸ் விதிப்படி சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றிபெறும் ரன் இலக்கு மாற்றி அமைக்கப்படும்.

12.05 மணிக்கு பிறகும் போட்டி தொடங்கவில்லை என்றால் வெற்றியை தீர்மானிக்க இரு அணிகளும் சூப்பர் ஓவர் விளையாடும்.

அதற்கும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்ற அணி ஐபிஎல் 2023 தொடரின் சாம்பியனாக அறிவிக்கப்படும்.

அதன்படி ஹர்திக் பாண்டியா கேப்டனாக உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை கிடைக்கும்.

ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 10 வெற்றி, 4 தோல்வி என 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வெற்றி, 5 தோல்வி என 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மைதானம் ரிப்போர்ட்:
இந்த மைதானம் குஜராத் அணிக்கு ஹோம் மைதானம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு எதிராக இருக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னை பிட்ச் போல இது ஸ்லோவாக இருக்காது.

மழை ரிப்போர்ட்:

நேற்று 60 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று 3 சதவீத மழைக்கு வாய்ப்புள்ளதாக AccuWeather கூறியுள்ளது.

IPL Final who will win the trophy?

இதனிடையே இன்று இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் போட்டியின் முடிவு எப்படி இருக்கும், ஐபிஎல் கோப்பை யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’அக்னி நட்சத்திரம் முடிஞ்சாலும் 100 டிகிரி வெயில் இருக்கு’: மக்களே உஷார்!

’இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா?’: சாக்‌ஷி மாலிக் கேள்வி!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “ஐபிஎல் பைனல்: இன்றும் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *