CSKvsMI: டிக்கெட் இல்லாமல் சேப்பாக்கில் குவிந்த ரசிகர்கள்!

Published On:

| By christopher

சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மே 6) நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது பரம வைரியான மும்பை இந்தியன்ஸை சந்திக்கிறது.

ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘எல் கிளாசிக்கோ’ என்று அழைக்கப்படும் இந்த ஆட்டம் மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.

நடப்பு சீசனில் ஏப்ரல் 8ஆம் தேதி வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அதேவேளையில் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு சொந்த மைதானத்தில் மும்பை அணியை தோற்கடிக்க முடியாமல் தவிக்கிறது சென்னை அணி. இந்த போட்டியில் அந்த துயரத்திற்கு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த போட்டியைக் காண காலை 10 மணி முதலே சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி இரு அணி ரசிகர்களும் குவிந்து வருகின்றனர்.

போட்டி அமைப்பாளர்களும், போலீசாரும் டிக்கெட் உள்ள ரசிகர்களை எந்த கேட் வழியாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றனர்.

அதே வேளையில் டிக்கெட் இல்லாத ரசிகர்களும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் மைதானத்தைச் சுற்றி வரும் காட்சிகளையும் சேப்பாக்கில் காணமுடிகிறது.

ரசிகர்களின் ஆதரவினை தாண்டி இரு அணிகளும் பிளே ஆப் செல்ல இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற நிலையில், ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

படங்கள் : கிட்டு

“கர்நாடகா தேர்தலுக்காக கேரளா ஸ்டோரி”: சீமான்

குலசாமி: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel