ipl dates bcci

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது?

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அடுத்த மூன்றாண்டுக்கான தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று (நவம்பர் 22) அறிவித்துள்ளது.

இந்திய அளவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்று யோசிக்காமல் கூறலாம். காலத்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட்டின் வடிவமும் மாறிக்கொண்டே வருகிறது. டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிகள் பல வருடங்களுக்கு மக்களிடையே பிரபலமாக இருந்த நிலையில், 20 ஓவர் கொண்ட டி20 போட்டிகள் 2003ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகம் ஆனது.

இதற்கிடையில், 2008ஆம் ஆண்டு பிசிசிஐ-ஆல் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்). 20 ஓவர்கள் கொண்ட இந்த தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுவார்கள். இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடும்.

ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலம் மூலம் பணம் கொடுத்து வாங்கும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் விருந்து போல் இருந்தது. ஏனென்றால், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றாக ஒரு அணியில் விளையாடுவதை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வென்றது. இது வரை 17 ஐபிஎல் தொடர்கள் நடந்துள்ளன. இந்த வருடம் நடந்த 17-வது ஐபிஎல் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து முறை, மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று முறை, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் இரண்டு முறை, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

இந்த ஆண்டுக்கான வீரர்களின் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வருகிற நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதியில் நடைபெறவுள்ள நிலையில், 2025, 2026, மற்றும் 2027-ஆம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் நடைபெறும் தேதிகளை பிசிசிஐ அந்தந்த ஐபிஎல் அணிகளுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் 2025 ஐபிஎல் போட்டி மார்ச் 14  – மே 25 வரை நடைபெற உள்ளது. 2026 ஐபிஎல் மார்ச் 15  – மே 31, 2027 ஐபிஎல் மார்ச் 14  – மே 30 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடங்கவிருக்கும் சில வாரங்களுக்கு முன்பு தான் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுதான் முதல் முறையாக மூன்றாண்டுக்கான ஐபிஎல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

‘அரசு உதவவில்லை’- 7 நடிகர்கள் மீது பாலியல் வழக்கை வாபஸ் பெறும் கேரள நடிகை!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… சவரன் 57,000-ஐ தாண்டியது!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வனத்துறையில் பணி! 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts