pat cummins goes to srh

IPL2024: சென்னையுடன் மீண்டுமொரு உரசல்… ரூ. 20.50 கோடி கொடுத்து கேப்டனையும் வாங்கியது ஹைதராபாத்!

ஐ.பி.எல் விளையாட்டு

சென்னை அணியுடன் மீண்டும் ஒருமுறை மோதி, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சை ஏலத்தில் எடுத்துள்ளது ஹைதராபாத்.

துபாயில் நடைபெற்று வரும் மினி ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றன.

இதில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு அவர்களை மட்டுமே டார்கெட் செய்தது.

முதலில் ட்ராவிஸ் ஹெட்டை சென்னையுடன் மோதி 6.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த அந்த அணி, மீண்டும் ஒருமுறை சென்னையுடன் மோதி கேப்டன் பேட் கம்மின்சையும் 20.50 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது.

நடுவில் சென்னை ஒதுங்கிக்கொள்ள ஹைதராபாத், பெங்களூர் அணி இடையே கம்மின்சை எடுப்பதில் இழுபறி நீடித்தது.

என்றாலும் கம்மின்ஸுக்கு செலவு செய்ய அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தயங்கவில்லை. இதன் மூலம் அந்த அணி ஹெட், கம்மின்ஸ் இருவருக்கும் மட்டுமே சுமார் 27.30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நல்ல கேப்டன் இல்லாமல் தடுமாறி வருவதால், கம்மின்சை ஏலத்தில் எடுத்தது ஒரு நல்ல தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை என மூன்றிலும் சிறந்த கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித்தந்த கம்மின்ஸ் ஹைதராபாத் அணியின் கனவையும் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

அன்று விலை போகாத வீரர்… இன்று ரூ.14 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே! : யார் அவர்?

ஆல்ரவுண்டர்களை குறிவைத்து தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0