2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த தொடர் மெகா ஏலம் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் தொடர் ஆகும். இதனால் ,எந்த அணி வலுவாக மாறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 21 ஆம் தேதி லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது என பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்பதால், இந்த முறை தொடக்க ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. மே 21 மற்றும் மே 22 ஆம் தேதி பிளே ஆப் குவாலிபையர் 1 மற்றும் 2 ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. மே 25 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதி ஆட்டம் நடைபெறும்.
வரும் தொடரில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் ஹோம் அண்டு அவே என்ற வகையில் மொத்தம் 14 ஆட்டங்கள் ஆட வேண்டும். மே மாதம் 14 ஆம் தேதி லீக் ஆட்டங்கள் முடிவடைகின்றன. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலுள்ள 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடருக்கான மெகா ஏலம் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பொங்கலுக்கும் எக்ஸாம் வைக்குறாங்க… சு.வெங்கடேசன் செய்த செயல்!