ஐபிஎல் 2025 தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியாகியுள்ளது. IPL 2025 schedule released
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாக ’இந்தியன் ப்ரிமீயர் லீக்’ ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.
முதல் போட்டியில் மோதுவது யார்? IPL 2025 schedule released
அதன்படி தொடரின் முதல்போட்டியானது மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சொந்த மைதானமான ஈடன் கார்டனில் சந்திக்கிறது.
அதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

தொடர்ந்து லீக் சுற்று போட்டிகள் மே 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை மோதுகின்றன. இதில் முதல் 4 நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறும்.
ஹைதராபாத்தில் மே 20ஆம் தேதி முதல் குவாலியபயர் போட்டியும், மே 21ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகின்றன.
தொடர்ந்து கொல்கத்தாவில் மே 23ஆம் தேதி இரண்டாவது குவாலிபயர் போட்டியும், மே 25ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக இறுதிப்போட்டியானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்தாண்டு இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.