IPL 2025: மெகா ஏலத்தில் ரிடென்ஷன் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Published On:

| By christopher

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஆக்சன் நடைபெறவுள்ள நிலையில், அந்த தொடர் மற்றும் இந்த மெகா ஆக்சன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க துவங்கிவிட்டது.

இந்த மெகா ஆக்சனுக்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் ‘ரிடென்ஷன்’ முறையில் எந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு ஐபிஎல் அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். இந்நிலையில், இம்முறை அந்த வரம்பை உயர்த்த வேண்டும் என பல ஐபிஎல் அணிகள் விரும்புவதாக தகவல் வெளியானது.

மேலும், ஒவ்வொரு அணிக்குமான ஏலத் தொகையையும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தன. தற்போது, ரூ.100 கோடி அளவுக்கு மட்டுமே ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வீரர்களை எடுக்க முடியும் என்ற நிலையில், அந்த வரம்பை குறைந்தது ரூ.120 கோடிக்கு உயர்த்த வேண்டும் என அணிகள் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையில்,மெகா ஏலம், தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை, ஏலத் தொகையை உயர்த்துவது குறித்து விவாதிக்க, அணிகளின் உரிமையாளர்களுடன் ஜூலை 31 அன்று மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ரிடென்ஷன் விதி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக் கானுக்கும், பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாதியாவுக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் கூட தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது 4 ஆக உள்ள தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் வரம்பை, 6 ஆக உயர்த்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரைட்-டு-மேட்ச் (RTM) முறையையும் திரும்பக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாகும் பட்சத்தில், தோனி இன்னொரு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது.

முன்னதாக, மெகா ஏலத்திற்கு முன் ருதுராஜ் கெய்க்வாத், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீச பத்திரன ஆகிய 4 வீரர்களை தக்க வைக்கவே சென்னை அணி திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. மேலும், ரிடென்ஷன் வரம்பு உயர்த்தப்பட்டால் தோனி தக்கவைக்கப்படலாம் என்றும் இல்லை என்றால் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் தகவல் வெளியானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு!

உயிரை பறித்த அலட்சியம்… பூனை கடித்து பெண் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share