ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியினை, வெளிநாட்டில் நடத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச மாதம் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் சென்னை-பெங்களூர் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திட (UAE), பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் ஐபிஎல் தொடரினை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தினால், வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்கள் கேள்விக்குறியாகி விடும் என பிசிசிஐ நினைக்கிறதாம்.
இதனால் இரண்டு கட்டமாக ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டு முதல் பாதியை இந்தியாவிலும், இரண்டாவது பாதியினை ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தி விடலாம் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்திருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பினை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2009, 2014- ம் ஆண்டுகளில் தேர்தல் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணி உடையலாம்”: ஜெயக்குமார்
தங்கையின் காதல் திருமணத்திற்கு… சாய் பல்லவியின் அன்பு பரிசு இதுதான்!