இந்த 2 பேர் ஏன்? RCB-யின் தந்திரம் இதுதான்! ‘பிளேயிங் 11’ என்ன?
18 வீரர்களை தக்கவைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து பெற்றது. இதை தொடர்ந்து, விராட் கோலி, ஃபப் டுபிளசிஸ், கிளென் மேக்ஸ்வெல், தற்போது கேமரூன் கிரீன் என வலுவான டாப் ஆர்டரை பெங்களூரு அணி அண்மையில் நடந்து முடிந்த 2024ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்தே களமிறங்கியது. IPL 2024 What is RCB’s Playing 11
இதன் விளைவாக, அதிகபட்சம் 6 வீரர்களுக்காக ஏலத்தில் பங்கேற்ற ஆர்.சி.பி, அந்த 6 இடங்களில், 3 பந்துவீச்சாளர்கள், 1 பவுலிங் ஆல்-ரவுண்டர் என 4 இடங்களை பந்துவீச்சாளர்களை கொண்டே நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, அல்சாரி ஜோசப்பை ரூ.11.5 கோடிக்கும், யாஷ் தயாலை ரூ.5 கோடிக்கும் பெங்களூரு அணி பெற்றுள்ளது. அவர்களை தொடர்ந்து, லாக்கி ஃபெர்குசனை ரூ.2 கோடி என்ற அடிப்படை விலைக்கும், டாம் கர்ரனை ரூ.1.5 கோடி என்ற அடிப்படை விலைக்கும் பெற்றுள்ளது.
இவர்களுடன், சவ்ரவ் சவ்கான், ஸ்வப்னில் படேல் என 2 இளம் வீரர்கள், ரூ.20 லட்சத்திற்கு ஏலம் போய் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், அல்சாரி ஜோசப், யாஷ் தயால் ஆகியோரை ஏலத்தில் எடுத்த காரணத்தை, பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் விளக்கியுள்ளார். அதிக திறன் கொண்ட இளம் வீரராக உள்ள யாஷ் தயால், பந்தை நன்றாக ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர், விக்கெட் எடுக்கும் திறன் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர் என்றும் ஆண்டி ஃப்ளவர் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, அல்சாரி ஜோசப் தேர்வு குறித்து பேசிய ஆண்டி ஃப்ளவர், “நாங்கள் முதலில் பாட் கம்மின்ஸை பெறத்தான் முயற்சித்தோம். ஆனால், அல்சாரி ஜோசப் கிடைத்தது எங்களுக்கு மிக மகிழ்ச்சியே. ஏனென்றால், நானும், ஃபப் டுபிளசிஸும் அல்சாரி ஜோசப்புடன் மிக நெருக்கமாகி பணியாற்றியுள்ளோம்”, என தெரிவித்துள்ளார்.
ஆர்.சி.பி-யின் ‘பிளேயிங் 11’ என்ன?
முன்பே கூறியதுபோல, விராட் கோலி, ஃபப் டுபிளசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் என ஒரு வலுவான டாப் ஆர்டரை ஆர்.சி.பி கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, அணியின் விக்கெட் கீப்பராக 5வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இணையலாம்.
இம்முறை சிறிய மாற்றமாக, ஃபப் டுபிளசிஸ் உடன் ரஜத் படிதார் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
இவர்களுடன், கடந்த சீசனில் பெங்களூரு அணிக்கு நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹிபால் லோம்ரோர் அணியில் இணைக்கப்படலாம்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், முகமது சிராஜ் முதலிடத்தை பிடிக்கிறார். அவர் இல்லாமல் பெங்களூரு அணி இல்லை என்பது நிதர்சனம். ஏற்கனேவே, 4ல் 3 வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அந்த 4வது இடம் அல்சாரி ஜோசப்பிற்கு செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் லாக்கி ஃபெர்குசன் அவரது இடத்தை பிடிக்கலாம்.
ஆண்டி ஃப்ளவரின் கருத்தை கேட்கும்போது, அவர்களின் ஃபாஸ்ட் பவுலிங் தாக்குதல் படையில், யாஷ் தயாலுக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அதிக கவனம் செலுத்திய ஆர்.சி.பி, ஒரு நல்ல ஸ்பின்னரை ஏலத்தில் எடுக்க தவறியுள்ளது. இதன் காரணமாக, ஆர்.சி.பி-யிடம் தற்போது கரண் சர்மா என்ற ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.
‘பிளேயிங் 11’ என்ன?
ரஜத் படிதார்
ஃபப் டுபிளசிஸ்
விராட் கோலி
கிளென் மேக்ஸ்வெல்
கேமரூன் கிரீன்
மஹிபால் லோம்ரோர்
தினேஷ் கார்த்திக்
கரண் சர்மா
அல்சாரி ஜோசப்
முகமது சிராஜ்
யாஷ் தயால்
இம்பேக்ட் வீரர்: வைசாக் விஜய் குமார்
இதன் மூலம், ஸ்பின் பிரிவை தவிர, அனைத்து பிரிவுகளிலும் பெங்களூரு அணி ஒரு ஜாம்பவான் அணியாகவே தோன்றுகிறது.
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதி: ஜனவரி 1 வரை டோக்கன் இல்லாமல் தரிசனம் செய்ய முடியாது!
பியூட்டி டிப்ஸ்: பற்களில் மஞ்சள் கறை… நீக்குவது எப்படி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கிரில்டு கார்ன்!
IPL 2024 What is RCB’s Playing 11