ஐபிஎல் தொடக்கம் மற்றும் இறுதிப்போட்டி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல்லுக்கு என தனியிடம் இருக்கிறது. ipl 2024 match schedule
கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் வருடத்துக்கு வருடம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இந்த 2024-ம் ஆண்டில் ஐபிஎல் தொடர் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதோடு கடந்த மினி ஏலத்தில் புதிய வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு எடுத்துள்ளன.
மேலும் ஐபிஎல் டீம்களின் கேப்டன்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றனர்.
அதேபோல இந்த வருடமும் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஹைதராபாத் அணியின் கேப்டனும் மாற்றப்படலாம் என தெரிகிறது. இதனால் புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள் என இந்த வருட ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே மாதம் 26-ம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மறுபுறம் ஐசிசி நடத்தும் டி2௦ உலகக்கோப்பை தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், ஐசிசி தொடர் தொடங்குவதற்கும் இடையில் வெறும் 6 நாட்கள் தான் உள்ளன.
என்றாலும் இந்தியா ஜூன் 5-ம் தேதி தான் அயர்லாந்தை எதிர்கொள்கிறது என்பதால், ஓரளவு வீரர்களுக்கு இடைவெளி கிடைக்கும் என தெரிகிறது.
இதற்கிடையில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டி வரை இருக்க வேண்டும் என்று, பிசிசிஐ அந்தந்த நாட்டு கிரிக்கெட் போர்டுகளிடம் உத்தரவாதம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் நடக்கும் போதே முக்கிய வீரர்கள் பாதியில் வெளியேறி விடுகின்றனர். இதனைத் தடுக்கவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசமனம், பவித்ரம்: ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த மோடி
”என்னை மன்னித்து விடுங்கள்” பிக்பாஸ் ஐஷு உருக்கம்!
ipl 2024 match schedule