LSG vs KKR : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியும் இன்று (ஏப்ரல் 14) மோதின.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் 39 ரன்களும் அடித்திருந்தனர்.
கொல்கத்தா அணி தரப்பில் இதுவரை நடந்த போட்டிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத மிட்செல் ஸ்டார்க், இப்போட்டியில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்து தன் மீதான விமர்சனங்களுக்கு இன்று பதிலடி கொடுத்தார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூ.24.75 கோடி கொடுத்து மிட்செல் ஸ்டார்க் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொதப்பிய சமர் ஜோசப்
இதனையடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத அணியின் தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.
முதல் ஓவரை ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக இன்று களம் காணும் வெஸ்ட் இண்டீஸின் சமர் ஜோசப் வீசினார்.
இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த ஓவரில் தேவையில்லாமல் அவர் பதற்றமடைந்த நிலையில், 2 வைடு, 2 நோ பால் வீசியதுடன் தனது முதல் ஓவரிலேயே 22 ரன்கள் விட்டு கொடுத்தார்.
எனினும் அடுத்து வந்த மொசின் கான், தனது அடுத்தடுத்த ஓவர்களில் சுனில் நரைன் (6) மற்றும் ரகுவன்ஷி(7) இருவரையும் வெளியேற்றி லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
Appreciate Post For PHILIP SALT,
What An Innings Man Total Dominance.😮💨👍#KKRvLSG #LSGvKKR #CSKvsMI #MIvCSK #IPL2024 pic.twitter.com/sgnDUFjb9p— 𝗔𝗵𝗮𝗮𝗻 𝗛𝗮𝗶𝗱𝗲𝗿 𝕏 (@ahaan_haider_) April 14, 2024
பிலிப் சால்ட் அதிரடி!
இந்த நிலையில் பிலிப் சால்ட்டுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஷ் அய்யர். அவர் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில், மறுபுறம் அதிரடியாக பேட்டை சுழற்றி சொந்த அணி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் பிலிப் சால்ட்.
26 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், இறுதியில் பவுண்டரி அடித்து அணியை வெற்றியை உறுதி செய்தார்.
15.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது கேகேஆர்.
ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 89 ரன்கள் குவித்த பிலிப் சால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Whistle Podu: தளபதியின் தமிழ் புத்தாண்டு ட்ரீட்… படத்தின் கதை இதுதானா?
மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் : ராமநாதபுரத்தில் வாக்கு சேகரித்த அண்ணாமலை