ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இளம்வீரர்… ஐபிஎல்க்கு வந்துட்டாரு… எந்த டீம்னு பாருங்க!

விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் இளம்வீரர் சமர் ஜோசப் நடப்பு தொடரில் விளையாடவிருப்பதாக, ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கப்பாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை 1-1 என சமன் செய்து வரலாறு படைத்தது.

இதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் 24 வயது இளம்வீரர் சமர் ஜோசப் மிகப்பெரும் காரணமாக அமைந்தார். இதையடுத்து அவரை ஐபிஎல் தொடருக்கு எடுத்திட பல்வேறு அணிகளும் போட்டியிட்டன.

இந்த போட்டியில் தற்போது கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

காயமடைந்த பந்துவீச்சாளர் மார்க் வுட்டிற்கு பதிலாக, சமர் ஜோசப்பை எடுத்திருப்பதாக அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலத்தில் விலை போகாத சமர் ஜோசப் தற்போது, ரூபாய் 3 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எலெக்‌ஷன் ஃப்ளாஷ் : சட்டமன்றத்தில் ஆ.ராசாவை பற்றி விவாதம்- எடப்பாடி திட்டம்!

தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்… முதல் போட்டியில மோதப்போறது இவங்க தான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0