IPL 2024: தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்

விளையாட்டு

2024 ஐபிஎல் தொடரில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி 221 ரன்களை சேர்த்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார்.

ஆனாலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன், 6 சிக்ஸ்களை பறக்கவிட்டிருந்தார். இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸ்களை சாம்சன் பூர்த்தி செய்தார்.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்த இமாலய இலக்கை எட்டும் 10வது வீரர் என்ற பெருமையை சாம்சன் பெற்றார்.

அதுமட்டுமின்றி, விராட் கோலி, ரோகித் சர்மா, மஹேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பிறகு, இந்த இலக்கை எட்டும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையையும் சாம்சன் பெற்றார்.

சஞ்சு சாம்சன் இந்த இலக்கை 159 இன்னிங்ஸ்களில் எட்டினார். இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸ்களை விளாசிய இந்திய வீரர் என்ற தோனியின் சாதனையை சாம்சன் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸ்களை விளாச, தோனி 165 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

தோனியை அடுத்து, விராட் கோலி 180 இன்னிங்ஸ்களிலும், ரோகித் சர்மா 185 இன்னிங்ஸ்களிலும், சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸ்களிலும் தங்களது 200 ஐபிஎல் சிக்ஸ்களை பூர்த்தி செய்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், 16 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மழையால் குளிர்ந்த சென்னை… கூடுதல் மழைக்கு குறி சொன்ன வெதர்மேன்!

சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனு: விசாரணை எப்போது?

தக் லைஃப் : சிம்புவின் மரண மாஸ் கெட்டப்.. அறிமுக வீடியோ இதோ!

மியூசிக் டைரக்டர் பெயர் இல்லாத அதர்வாவின் “DNA” ஃபர்ஸ்ட் லுக்..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0