இன்று (மார்ச் 23) நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரின் 2-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, சுமார் 15 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று களமிறங்கினார். அதனாலேயே இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியது.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள் டேவிட் வார்னர் & மிட்சல் மார்ஷ், அதிரடியாகவே ஆட்டத்தை துவங்கினர்.
12 பந்துகளில் 20 ரன்கள் விளாசி இருந்தபோது மார்ஷ் ஆட்டமிழக்க, பவர்-பிளே முடிவில் டெல்லி அணி 54 ரன்கள் குவித்திருந்தது.
பின் வார்னரும் 29 ரன்களுக்கு வெளியேற, ஷாய் ஹோப் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இணைந்து அணியின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்த துவங்கினர்.
ஷாய் ஹோப் 33 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, யாரும் எதிர்பாராத விதமாக பண்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
REBEL: ரசிகர்களை கவர்ந்ததா? – திரைப்பட விமர்சனம்!
அடுத்து வந்த அனைவரும், சொற்ப ரன்களுக்கு வெளியேறி, டெல்லி அணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், 9-வது வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் வெறும் 10 பந்துகளில் 32 ரன்களை விளாச, டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது.
பஞ்சாப் அணிக்காக, அர்ஷ்தீப் சிங் & ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.
175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ஆட்டத்தை துவங்கினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கவும் செய்தது.
ஷிகர் தவான் (22), பேர்ஸ்டோ (9), பிரப்சிம்ரன் சிங் (26), ஜிதேஷ் சர்மா( 9) என முக்கிய வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து விரைவாக பெவிலியன் திரும்பினர்.
ஆனால், 5-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இங்கிலாந்து நட்சத்திரங்கள் சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டன் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இந்த ஜோடி, 5-வது விக்கெட்டிற்கு 67 ரன்களை குவித்தது.
இதற்கிடையில், 19-வது ஓவரில் டெல்லி அணிக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தார், கலீல் அகமது. சாம் கர்ரனை 63 ரன்களுக்கு வெளியேற்றிய கலீல் அகமது, அடுத்த பந்திலேயே ஷஷான்க் சிங் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
THE THING FANS MISSED A LOT…!!! 🥹
– Rishabh Pant with a super quick stumping! ⚡pic.twitter.com/tvSIlVcHBD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 23, 2024
அந்த ஓவரின் கடைசி பந்தில், வார்னர் தனது கைக்கு வந்த கேட்சை கைவிட, கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. லிவிங்ஸ்டன் ஒரு அபார சிக்ஸரை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லிவிங்ஸ்டன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 (21) ரன்களை விளாசி இருந்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8-வது இடத்தில் தொடரை நிறைவு செய்த பஞ்சாப் கிங்ஸ், இம்முறை ஒரு வெற்றியுடன் தனது பயணத்தை துவங்கியுள்ளது.
முதல் போட்டியிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்றதால், அதன் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதே நேரம் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஆரம்பத்திலயே தோல்வியை தழுவி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் மீண்டும் கம்பேக் கொடுத்து டெல்லி அணியை கரை சேர்ப்பாரா? என்பது வரும் நாட்களில் தான் தெரிய வரும்.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!
Mobile Phone: ரியல்மீ -க்கு போட்டியாக களமிறங்கிய விவோ… சிறப்பம்சங்கள் என்ன?
பொன்முடி முதல் தேஜஸ்வி சூர்யா வரை: ஒரே நாளில் விசாரிக்கப்பட்ட முக்கிய வழக்குகள்!