RCB vs PBKS: ‘தூதுவன் வந்தான்’ வென்றது பெங்களூரு… கோலி கொண்டாடிய ரசிகர்கள்!

விளையாட்டு

முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி, முதல் வெற்றியை நோக்கி பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கியது.

இப்போட்டி, பெங்களூரு அணியின் சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாஃப் டூ பிளெஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பவர்-பிளேவில் பெங்களூரு அணிக்காக பந்துவீச வந்த யஷ் தயாள், 3 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே வழங்கி, பஞ்சாப் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதன் காரணமாக, பஞ்சாப் அணி முதல் 6 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்தது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் கேப்டன் ஷிகர் தவான் பொறுப்பாக விளையாடி 47 ரன்கள் சேர்த்தார்.

அவருக்கு துணையாக, பிரப்சிம்ரன் சிங் 25 ரன்கள், லிவிங்ஸ்டன் 17 ரன்கள், சாம் கர்ரன் 23 ரன்கள், ஜிதேஷ் சர்மா 27 ரன்கள் சேர்த்தனர்.

கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய ஷஷாங்க் சிங், 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசி பஞ்சாப் அணிக்கு ஒரு சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

பஞ்சாப் ஜெர்ஸி போட்டுக்கொண்டு ‘பெங்களூருக்காக’ விளையாடிய… பட்டைய ‘கெளப்பும்’ மீம்ஸ்கள்!

இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணிக்காக, மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, துவக்கமே பெரும் சரிவாக அமைந்தது.

கேப்டன் பிளெஸிஸ் 3 ரன்களுக்கும், கேமரூன் கிரீன் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால், மறுமுனையில் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் விளாசிய விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார்.

அடுத்து வந்த ரஜத் படிதார் விராட் கோலிக்கு துணையாக சிறிது நேரம் களத்தில் நின்றாலும், அவரும் 18 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

பின் வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2 பேரின் விக்கெட்களையும் கைப்பற்றிய ஹர்ப்ரீத் பிரார், ஆட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.

மறுமுனையில், ஒற்றை ஆளாக போராடிக்கொண்டிருந்த விராட் கோலியும் 77 (49) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவை என்ற கடும் நெருக்கடியை பெங்களூரு சந்தித்தது.

அப்போது ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் & மஹிபால் லோம்ரோர், பந்துகளை பவுண்டரி நோக்கி பறக்கவிட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 19.2 ஓவரில் எட்டினர்.

தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களையும், லோம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களையும் விளாசியிருந்தனர்.

இதன்மூலம், இந்த 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பெங்களூரு என பெயர் மாற்றியதற்கு பிறகு பெற்ற முதல் வெற்றி என்பதால், ரசிகர்கள் ஆடிப்பாடி இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செங்கல் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

“பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” : நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்!

காங்கிரஸ் விளவங்கோடு வேட்பாளர்: யார் இந்த தாரகை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *