2024 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய 2 அணிகள் வெளியேறிய நிலையில், மீதமுள்ள 8 அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்புக்காக கடுமையாக போராடி வருகிறது.
குறிப்பாக, 12 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வென்று, 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல, மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், அந்த அணியின் கேப்டனும் முக்கிய வீரருமான ரிஷப் பண்ட்டிற்கு, ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முன்னதாக, மே 7 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் விளையாடிய போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், டெல்லி அணி மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக அவருக்கு இந்த தடை வழங்கப்பட்டுள்ளது.
தடை மட்டுமின்றி, ரிஷப் பண்ட்டிற்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயர் உட்பட அன்றைய போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய அனைவருக்கும், ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 31 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி மெதுவாக பந்துவீசியதற்கு, ரிஷப் பண்ட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஏப்ரல் 3 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 2வது முறையாக டெல்லி அணி மெதுவாக பந்துவீசியதால், அவருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 3வது முறையாக டெல்லி அணி மெதுவாக பந்துவீசியதால், தற்போது ரிஷப் பண்ட்டிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வரும் ஏப்ரல் 12 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடவுள்ள மிக முக்கிய ஆட்டத்தில், ரிஷப் பண்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
CSK-வுக்கு எதிரான ஆட்டம்… கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதம்… காரணம் என்ன?
ஸ்டார் தொகுதி பார்வை… கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுகவின் கணக்குகள்!