PBKSvsRR : பஞ்சாப் கிங்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 13) நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
சண்டீகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 31 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
தொடர்ந்து 148 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தனுஷ் கோடியன் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் குவித்தனர்.
லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அறிமுக வீரர் தனுஷ் கோடியன் (24) கிளீன் போல்டானார். தொடர்ந்து, நடப்பு தொடரில் முதல் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 18 ரன்களில் நடையை கட்டினார். அவருக்கு பின்னர் களமிறங்கிய ரியான் பராக் 23 ரன்னிலும், துருவ் ஜூரெல் 6 ரன்னிலும், ரோமன் பவல் (11) கேசவ் மகராஜ் (1) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
எனினும் முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் கொடுக்காத அர்ஷ்தீப் சிங், மைதானத்தில் இருந்த பஞ்சாப் ரசிகர்கள் மனதில் நம்பிக்கை விதைத்தார்.
ஆனால் அடுத்த 3 பந்துகளில் முறையே 6, 2, 4 என ஹெட்மேயர் ஸ்கோர் செய்ய, 19.5 ஓவரில் 152 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் வெறும் 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரோடு ஷோக்கு இத பண்ணலாமோ? : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: வாக்குக்கு பணம்… ஸ்டாலின் உத்தரவு – டென்ஷனில் அமைச்சர்கள்!