மும்பை அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், குஜராத் அணி சுப்மன் கில் தலைமையிலும், டெல்லி அணி ரிஷப் பண்ட் தலைமையிலும் என புதிய கேப்டன்களுடன் இந்த தொடரில் மேற்கண்ட அணிகள் களமிறங்குகின்றன.
இந்த புதிய கேப்டன்களுடன் களம் காணும் அணிகளின் பட்டியலில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இணைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதை அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இந்த கேப்டன் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இதனால் தான் ரூபாய் 2௦.5௦ கோடியை கொட்டி கொடுத்து கம்மின்சை ஹைதராபாத் அணி எடுத்ததாக, ஐபிஎல் மினி ஏலத்தின் போதும் பேச்சுகள் அடிபட்டன.
#OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf
— SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024
தற்போது அது உண்மையாகி இருக்கிறது. இந்த 2024 ஐபிஎல் தொடரில், பேட் கம்மின்ஸ் தலைமையில் அந்த அணி களமிறங்குகிறது. இதையடுத்து அந்த அணிக்கு நியமிக்கப்பட்ட 1௦-வது கேப்டன் எனும் பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.
முன்னாள் கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில், ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 2022-ம் ஆண்டு 8-வது இடத்தினையும், 2023-ம் ஆண்டு 1௦-வது இடத்தினையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பரிகார பூஜை கட்டண அறிவிப்பு வாபஸ்!
எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்