பஞ்சாப்-க்கு எதிராக விராட் கோலி அடித்து நொறுக்கிய சாதனைகள் என்ன?

விளையாட்டு

Virat Kohli: பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஒரு மிக முக்கிய ஆட்டத்தில், பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், தோல்வியடைந்த பஞ்சாப் அணி, 2024 ஐபிஎல் தொடரில் இருந்து நாக்-அவுட் ஆனது.

இப்படியான ‘வாழ்வா? சாவா?’ ஆட்டத்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்குவகித்த விராட் கோலி, 47 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அதில், 6 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடக்கம்.

இந்நிலையில், இந்த 6 சிக்ஸ்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 400 சிக்ஸ்களை பூர்த்தி செய்துள்ள விராட் கோலி, இந்த இமாலய இலக்கை எட்டும் 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது வரை டி20 கிரிக்கெட்டில் 506 சிக்ஸ்களை பறக்கவிட்டுள்ளார்.

இவர்களை அடுத்து, இந்த பட்டியலில் எம்.எஸ்.தோனி 334 சிக்ஸ்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

இன்றைய அதிரடி ஆட்டத்தால், 2024 ஐபிஎல் தொடரில் 600 ரன்களை கடந்த விராட் கோலி, 12 போட்டிகளில் 634 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ளார்.

இதன்மூலம், அதிக முறை ஒரு ஐபிஎல் சீசனில் 600 ரன்களை கடந்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

இருவருமே, இதுவரை 4 ஐபிஎல் தொடரிகளில் 600-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, இன்றைய ரன் குவிப்பால், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார், விராட் கோலி.

இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் 3 அணிகளுக்கு எதிராக 1000-க்கும் அதிகமான ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

இவர் முன்னதாக சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிரே 1,000 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்தபடியாக, தலா 2 அணிகளுக்கு எதிராக 1,000-க்கும் அதிகமான ரன்களை சேர்த்து, டேவிட் வார்னர் (கொல்கத்தா & பஞ்சாப்), ரோகித் சர்மா (கொல்கத்தா & டெல்லி) ஆகியோர், இப்பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கிராம் உப்பு சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

பியூட்டி டிப்ஸ்: அழகை அதிகரிக்க உதவும் மாம்பழக் கூழ்!

கிச்சன் கீர்த்தனா : வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்

உலகக்கோப்பை பதக்கத்திற்கு தகுதியானவர் யார்? : யுவராஜின் ’டக்கர்’ பதில்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *