வங்காள தேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக விக்கெட் வேட்டை நடத்தி வரும் முஸ்தபிசுர் பர்ப்பிள் கேப் பட்டியலிலும் இருக்கிறார்.
இதற்கிடையில் உலகக்கோப்பைத் தொடருக்காக முஸ்தபிசுர் தன்னுடைய அணியில் மே 1 முதல் இணையவிருப்பதால், அவர் சென்னை அணிக்காக ஏப்ரல் 3௦ வரை தான் விளையாடுவார் என கூறப்பட்டது. முன்னதாக விசா நடைமுறைக்காக அவர் வங்காள தேசம் சென்று வந்தார்.
இதனால் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியினை அவர் மிஸ் செய்யவும் செய்தார். அந்த போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. மே மாதம் முதல் சென்னை அணியில் முஸ்தபிசுர் இருக்க மாட்டார் என்னும் தகவல், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அணி மற்றும் பிசிசிஐ கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மே 1-ம் தேதி பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கு வங்காள தேசம் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அதற்குப்பிறகு அவர் பயிற்சிக்காக வங்காள தேசம் சென்று விடுவார். அவருக்கு மாற்றுவீரராக சென்னை அணி யாரை களமிறக்கப்போகிறது? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thug Life: மீண்டும் இணைந்த நடிகர்.. ஒரு வழியாக முடிவுக்கு வந்த சர்ச்சை..!
மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?