RCB Vs MI: ஆர்சிபி தோற்க ‘அம்பயர்’ தான் காரணம்… ‘ஆதாரம்’ பகிரும் ரசிகர்கள்!

விளையாட்டு

நேற்று (ஏப்ரல் 11) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், வழக்கம்போல பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

மிகவும் எதிர்பர்க்கப்படும் ஐபிஎல் அணிகளில் ஆர்சிபியும் ஒன்றாக உள்ளது. 16 வருடங்களாக அந்த அணி கோப்பை வெல்லாவிட்டாலும் கூட தீவிர ரசிகர்கள் உள்ளனர். அதோடு பிற அணி ரசிகர்களும் கோலிக்காகவாது பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

உலகின் தலைசிறந்த வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி நடப்பு தொடரில் தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. குறிப்பாக நேற்று 196 ரன்களை எடுத்தும் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆர்சிபி தோற்றது ஒருபக்கம் இருந்தாலும் இதற்கு அம்பயர்கள் தான் முக்கிய காரணம் என, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதோடு இதற்கான ஆதாரத்தினையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். பெங்களூரு வீரர் அடித்த பந்து பவுண்டரியைத் தொட்டது நன்றாகத் தெரிந்தாலும், சரியாக செக் செய்யாமல் அதற்கு ரன்களை அம்பயர் அளிக்கவில்லை.

இதேபோல ஸ்டம்பில் படாமல் சைடில் சென்ற பந்திற்கு எல்பிடபிள்யூ கொடுத்து, பெங்களூரு அணியின் முக்கிய விக்கெட் வீழ்வதற்கும் அம்பயரே காரணமாக இருந்தார்.

தினேஷ் கார்த்திக் ஆடியபோது பந்து அவரின் நெஞ்சுக்கு மேலே சென்றது. ஆனால் அதற்கு அம்பயர் நோ பால் கொடுக்க மறுத்து விட்டார். இதேபோல மும்பை அணி ஸ்லோ ஓவர் போட்டதற்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.

உச்சகட்டமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரிவியூ முடிந்து விட்டது. ஆனாலும் அம்பயர் ரிவியூ கேட்டு பெங்களூரு அணியை வெகுவாக சோதித்தார். மேற்கண்ட விஷயங்களை அம்பயர்கள் சரியாக செய்திருந்தால் கோலி அணிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஒருவேளை சூப்பர் ஓவர் கூட சென்றிருக்கலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஆர்சிபி தோற்றதற்கு, அம்பயர்களும் ஒரு காரணம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: இரண்டு பேர் கைது!

‘ரோமியோ’ விஜய் ஆண்டனி கவர்கிறாரா? – திரை விமர்சனம்!

பாஜக – திமுக மோதல்… “அண்ணாமலையின் மிரட்டல் கோவையில் எடுபடாது”: கணபதி ராஜ்குமார்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *