கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் வருடத்துக்கு வருடம் தன்னுடைய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது.
நடப்பு சீசனில் ஐபிஎல் தொடர் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தாண்டு கூடுதல் சுவாரஸ்யமாக ஐபிஎல் மினி ஏலத்தில், புதிய வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு எடுத்துள்ளன.
இந்த தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் கேப்டன்கள் மாறுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல இந்த வருடமும் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல ஹைதராபாத் அணியின் கேப்டனும் மாற்றப்படலாம் என தெரிகிறது. இதனால் புதிய கேப்டன்கள், புதிய வீரர்கள் என இந்த வருட ஐபிஎல் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில் தேர்தல் காரணமாக, இந்தாண்டு ஐபிஎல்லின் பாதி போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முழு போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் சமீபத்தில் அளித்த பேட்டியில், ”தேர்தல் தேதிகளுக்காக காத்திருக்கிறோம்.
தேர்தல் தேதிகள் கிடைத்தவுடன் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் முடிவு செய்யப்படும். இந்தியாவிலேயே தொடரினை நடத்திட முயற்சி செய்து வருகிறோம்.
ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடும். மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன,” என தெரிவித்து இருக்கிறார்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தடியடி.. கண்ணீர் புகை குண்டுகள்.. பரபரக்கும் களம் : விவசாயிகள் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டது ஏன்?
பொன்முடி சூமோட்டோ வழக்கு: விசாரணை தேதி மாற்றம்!
எம் எஸ் தோனி பத்து தலை கொண்ட ராவணன் . அவருக்கு தோல்வியே கிடையாது.
Yes 👍