Mayank Yadav: வந்த ‘திடீர்’ சிக்கல்… என்ன செய்யப்போகிறது லக்னோ?

Published On:

| By Manjula

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக, அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணிக்காக இதுவரை ஆடாத வீரர்கள் மிகவும் பிரமாதமாக ரன்கள் குவிக்க, முக்கிய வீரர்கள் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்கின்றனர்.

குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுலின் லக்னோ அணி அபாயகரமான அணியாக பார்க்கப்படுகிறது. ரவி பிஷ்னோய், குருணால் பாண்டியா, நவீன் உல் ஹக், யஷ் தாகூர், மயங்க் யாதவ் என தரமான பவுலிங் யூனிட்டை அந்த அணி கொண்டுள்ளது.

இதனால் குறைந்த ஸ்கோரை எடுத்தாலும் கூட, தொடர்ந்து 3 போட்டிகளை வென்றுள்ளது. குறிப்பாக அந்த அணியின் மயங்க் யாதவ் 156 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தி வருகிறார்.

வேகத்துடன் துல்லியமாகவும் அவர் பந்துவீச்சு இருப்பதாக, உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என, அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், ”மயங்க் யாதவிற்கு இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று (ஏப்ரல் 12) நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டி மற்றும் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டிகளில் (ஏப்ரல் 14) விளையாட மாட்டார்.

நாங்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தோம். அதில் வீக்கம் சிறியதாகத் தான் இருக்கிறது. எனவே சென்னைக்கு எதிரான போட்டியில் (ஏப்ரல் 19) அவர் களமிறங்குவார்”, என்றார்.

அடுத்த 2 போட்டிகளில் மயங்க் யாதவ் இல்லாதது, லக்னோ அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் மாற்றப்பட்டதா? : சத்ய பிரதா சாகு விளக்கம்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

GOAT அப்டேட்: மங்காத்தா சென்டிமென்டுடன் ‘களமிறங்கும்’ வெங்கட் பிரபு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel