SRH vs KKR: 2024 ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் மோதிக்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளே, மீண்டும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை குறி வைத்து இறுதிப்போட்டியில் களமிறங்கின.
முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இம்முறை முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், அவர் எடுத்த இந்த முடிவு அந்த அணிக்கு பின்னர் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அதிரடி ஆட்டக்காரர்களாக அறியப்பட்ட அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் முதல் 2 ஓவர்களிலேயே தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து வந்த ராகுல் திரிபாதி முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 55 ரன்கள் சேர்த்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெறும் 9 ரன்களுக்கு வெளியேறினார்.
பின் களமிறங்கிய ஐதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐடென் மார்க்ரம் (20 ரன்கள்), நிதிஷ் குமார் (13 ரன்கள்), ஹெய்ன்ரிச் கிளாஸன் (16 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு வெளியேற, ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து, மோசமான நிலைக்கு சென்றது.
பின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மட்டும் 24 ரன்கள் சேர்க்க, அந்த அணி 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், ஒரு ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மிக குறைந்த ரன்களை சேர்ந்த அணி என்ற ஒரு மோசமான சாதனையை ஐதராபாத் பெற்றது. கொல்கத்தா அணிக்காக ஆன்ட்ரே ரசல் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுனில் நரேன் விக்கெட்டை 2வது ஓவரிலேயே கைப்பற்றி பாட் கம்மின்ஸ் ஒரு திருப்பம் அளித்தாலும், அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் பந்துகளை சரமாரியாக பவுண்டரிக்கு விளாசினார்.
அவருக்கு துணையாக, மற்றோரு துவக்க ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், கொல்கத்தா அணி 10.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. வெங்கடேஷ் அய்யர் 4 ஃபோர், 3 சிக்ஸ் உடன் 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், 2024 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி, 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பைக்கு பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பின் தனது 3வது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.-
மகிழ்
மகாராஷ்டிரா சுரானா ஜூவல்லர்ஸில் ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!
மறுபடியும் முதல்ல இருந்தா: அப்டேட் குமாரு
pinup2025.com: пин ап казино – пин ап