ஐபிஎல் ஏலத்தில் 3.60 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சொந்த ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் ராபின் மின்ஸ். தோனியை போலவே அதிரடி பேட்ஸ்மேனான அவரை ஐபிஎல் 2024 ஏலத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்த நிலையில் தனது சூப்பர் பைக்கில் இன்று (மார்ச் 3) பயிற்சிக்கு சென்ற மின்ஸ், எதிரே வந்த பைக்குடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவரது தந்தை பிரான்சிஸ் மின்ஸ் பேசுகையில், “அவரது பைக் எதிரே வந்த மற்றொரு பைக்குடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது கவலைக்கொள்ளும்படி பெரிதாக எதுவும் இல்லை, அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்” என்று தெரிவித்தார்.
வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் 2024 தொடரில் தான் 21 வயதான ராபின் மின்ஸ் அறிமுகமாக இருந்தார். போட்டி தொடங்குவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அவர் விபத்தில் சிக்கியுள்ளது குஜராத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலக்சன் ஃபிளாஷ் : ஸ்டிக்கர் ஒட்டும் வீடுகளுக்குதான் பணமா? திமுக திண்ணை பிரசாரத்தில் திகுதிகு!
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!