IPL 2024 Final: சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகம் ? ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 26) இரவு கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை சேப்பாக்கம் மைதானம்:

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இதுவரை மொத்தமாக 84 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 84 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 49 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 35 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

IPL 2024 Final: Who Will Win in Chepauk?

அதேபோல், முதல் இன்னிங்ஸில் சராசரி ரன்கள் 165 ஆகும். சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற அணிகள் 42 முறை வெற்றி பெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் அதிகபட்சமாக எடுக்கப்பட்ட ரன் 246/5 ஆகும். சேஸிங்கில் அதிகபட்ச ரன்கள் 201/6.

முதலில் பேட்டிங் செய்யும் அணிகள்தான் சென்னையில் அதிக ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெற்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியிலும் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் முதலில் பேட்டிங் செய்து வெற்றியும் பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான  போட்டியின்போது பனி விழுந்தால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக அமையும். அதிக விக்கெட்கள் விழும்.

IPL 2024 Final: Who Will Win in Chepauk?

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் இதுவரை இரண்டு முறை இறுதிப்போட்டிகள் நடைபெற்றுள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியின் மூலம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.

2011ல் இங்கு நடத்தப்பட்ட முதல் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.

இதே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது இலக்கை விரட்டிய அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது.

அதனை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2014ம் ஆண்டு தனது இரண்டாவது கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கலாம்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவேரி கூக்குரல்… ஈஷாவுக்கு அமைச்சர் நேரு புதிய கோரிக்கை!

மழைக்கு ரெஸ்ட்… மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்: வானிலை மையம் அப்டேட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts