CSK vs RCB: முதல் போட்டியில் ‘களமிறங்கும்’ அந்த 11 வீரர்கள் யார்?

விளையாட்டு

ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

முதன்முறையாக ருத்துராஜ் தலைமையில் சென்னை அணி களம் காணுவதால், ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை.

இதற்கிடையில் சென்னை அணியின் தொடக்கவீரர் டெவன் கான்வே இந்தாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. மறுபுறம் இளம்வீரர் பதிரனாவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழை வழங்கவில்லை.

இதனால் அவர்கள் இருவரின் இடத்தினை யார் நிரப்பப்போகிறார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்தநிலையில் சென்னை அணியில் நாளை களமிறங்கும் 11 வீரர்கள் குறித்த உத்தேச தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

CSK அணியின் புதிய ‘கேப்டன்’ யாருன்னு பாருங்க!

அதன்படி டெவன் கான்வே இடத்தில் அவரின் சகவீரர் ரச்சின் ரவீந்திராவே களமிறங்குகிறார். பதிரனா இடத்தில் வங்காள தேசம் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை சென்னை அணி களமிறக்குகிறது.

சிவம் துபேவும் அணியில் இணைந்துள்ளதால் சென்னை அணியில் தற்போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் இதுவரை நேருக்கு நேராக சென்னை-பெங்களூரு அணிகள் மொத்தம் 31 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 2௦ முறை வென்றுள்ளது. பெங்களூரு அணி 1௦ முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.

சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை சென்னை அணியே இங்கு முடிசூடா ராஜாவாக திகழ்கிறது. சென்னையை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணி வென்று, 16 வருடங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2024: பத்து கேப்டன்களுமே ‘இந்த’ விஷயத்துல ஒற்றுமையா இருக்காங்க!

முதல் போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் உத்தேச வீரர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:-

1. ருத்துராஜ் கெய்க்வாட் (கேப்டன்) 2. ரச்சின் ரவீந்திரா 3. மொயின் அலி 4.டேரில் மிட்செல் 5.சிவம் துபே 6.ரவீந்திர ஜடேஜா 7. தோனி 8. ஷர்துல் தாகூர் 9. தீபக் சாஹர்
10. துஷார் தேஷ்பாண்டே 11.முஸ்தாபிசுர் ரஹ்மான் .

இம்பாக்ட் பிளேயர்: அஜிங்கியா ரஹானே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:-

1. பாஃப் டூ பிளசிஸ் (கேப்டன்) 2. விராட் கோலி 3. கேமரூன் கிரீன் 4.ரஜத் படிதார் 5. கிளென் மேக்ஸ்வெல் 6.மஹிபால் லாம்ரோர் 7.தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்) 8. சுயாஷ் பிரபுதேசாய் 9.லோகி பெர்குசன் 1௦.முஹமது சிராஜ் 11.கரண் ஷர்மா.

இம்பாக்ட் பிளேயர்: ஆகாஷ் தீப்

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: பத்து கேப்டன்களுமே ‘இந்த’ விஷயத்துல ஒற்றுமையா இருக்காங்க!

தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது தான் பாஜகவின் ஃபார்முலா: ஸ்டாலின் காட்டம்!

தேர்தல் பத்திரம்.. அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த எஸ்பிஐ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *